நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா இன்று!!

”நடமாடும் பல்கலைக்கழகம்” என போற்றப்படும் நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது வாழ்க்கை பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்…

பட்டுக்கோட்டை அடுத்த திருக்கண்ணாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்த நெடுஞ்செழியனின் இயற்பெயர் நாராயணசாமி. அண்ணாமலை பல்லைக்கழகத்தில் படித்த போது தமிழ் இலக்கணத்தில் புலமை பெற்ற அவர், இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் என அனைத்து துறைகளிலும் வல்லவரானார். நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர், திராவிடர் இயக்கத்தின் தூணாக விளங்கினார். தந்தை பெரியாரிடம் நன்மதிப்பை பெற்ற நெடுஞ்செழியன், 1938ம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். அஇஅதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் பொதுச்செயலாளராகவும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார். திராவிடர் இயக்கத்தின் தலைவர்களில் இறுதி மூச்சு வரை பகுத்தறிவு கொள்கையில் உறுதியாக இருந்தவர்களில், நெடுஞ்செழியனும் ஒருவர். ”திருக்குறள் தெளிவுரை”, ”திராவிடர் இயக்க வரலாறு”, ”கண்ணீரும், செந்நீரும் வளர்த்த தமிழகம்” ஆகியவை, நெடுஞ்செழியன் எழுதிய புத்தகங்களில், ஆர்வத்தை தூண்டுபவை ஆகும். நாவலர் நெடுஞ்செழியனின் புகழை போற்றும் விதமாக, அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Exit mobile version