அஇஅதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், ஏராளமான தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.
வருகிற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அஇஅதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனுக்கள், புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுவரும் நிலையில், விருப்ப மனுக்கள் பெறவதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி நாள் என்பதால் விருப்ப மனுக்களை பெறுவதற்காக ஏராளமானோர் அதிகாலையிலேயே கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் வழக்கமாக 10 மணிக்கு துவங்கும் பணிகள், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணிக்கு விருப்ப மனுக்கள் வழங்கும் பணிகள் நிறைவடைய இருப்பதால், விருப்ப மனுக்களை பெறவும், பெற்ற மனுக்களை பூர்த்தி செய்து வழங்கவும் நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.