நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தர வேண்டுகோள் விடுத்தனர். அதேபோன்று, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான உச்சபட்ச வயது வரம்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வாரம் காலம் நீட்டிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த நாளை கடைசி நாளாகும். அதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version