இன்று நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதல்நிலைத் தேர்வு

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி உள்பட்ட குடிமைப்பணி பதவிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் முதல்நிலைத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

நாடளவில் 72 நகரங்களில் உள்ள 2 ஆயிரத்து 569 மையங்களில் இந்தத் தேர்வை நடைபெறுகிறது. 10 இலட்சத்து 58 ஆயிரம் பேர் இதை எழுதுகின்றனர். விருப்பத்துக்கேற்ப தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம் என்று தேர்வாணையம் முன்னர் அறிவித்ததையொட்டி, 60 ஆயிரம் பேர் தங்கள் தேர்வுமையங்களை மாற்றிக்கொண்டனர் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

காலை 9.30 மணி, பகல் 2.30 மணி என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்வுக்காக பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 நிமிடம் முன்னர்வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version