இன்று பிரதமர் மோடி தலைமையில் முதல் நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் அரசு பொறுப்பேற்று முதல் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றனர்.

Exit mobile version