கணினியின் தந்தை என்ற அழைக்கப்படும் சார்லஸ் பாப்பேஜ்-இன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியமான ஒன்றாகிவிட்டது.ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கணினி இல்லை என்றால் தற்போது உலகம் இயங்காது என்றுக்கூட சொல்லலாம் அப்படிப்பட்ட கணினியை முதலில் கண்டு பிடித்தவர் சார்லஸ் பாபேஜ்.
சார்லஸ் பாபேஜ் 1791ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி லண்டனில் பிறந்தார். பெஞ்சமின் பாபேஜ் மற்றும் பெட்ஸி பிளம்லீ டீப் தம்பதியரின் 4 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் சார்லஸ் பாபேஜ்.
சார்லஸ் பாபேஜின் தந்தை ஒரு வங்கியாளர் மற்றும் வணிகராக பணியாற்றினார்,சார்லஸ் பாபேஜ் தனது ஆரம்பக்கல்வியின் பெரும்பகுதியை தனியார் ஆசிரியர்களிடமிருந்து பெற்றார்.பின்னர் 1810ம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழத்தில் இணைந்த இவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.அங்கு அவருக்கு கணிதத்தின் மீதான பற்று அதிகரித்தது. தனது பயிற்றுவிப்பாளரைவிட கணிதத்தைப் பற்றி அதிகம் அறிந்திருந்தார்.
1814ம் ஆண்டில், கேம்பிரிட்ஜிலிருந்து சார்லஸ் பாபேஜ் பட்டம் பெற்ற அதே ஆண்டு ஜார்ஜியானா விட்மோர் என்பவரை மணந்தார்.
சார்லஸ் பாப்பேஜ் பட்டம் பெற்ற பிறகு, அரசு நிறுவனத்தில் வானியல் பற்றிய விரிவுரைகள் மற்றும் 1816ல், அரசு சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1820ம் ஆண்டில், அவர் வானியல் சமுதாயத்தை நிறுவ உதவினார்.
மேலும் சார்லச் பாப்பேஜ்1882ல் வேறுபாட்டியல் நிகர்ப்பாடுகளை தீர்வு செய்யக்கூடிய வேறுபாட்டுப் பொறி Difference Endine என்னும் எந்திரத்தை உருவாக்கினார். இதுவே இன்றைய கணினியின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது.
1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்து பகுப்பாய்வுப்பொறி Analytical Engine என்ற முதல் கணினியை சார்லஸ் உருவாக்கினார்.கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.
இவர் கண்டுபிடித்த கம்ப்யூட்டரை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. அதன் எடை ஆயிரம் கிலோ. அந்தக் கம்ப்யூட்டரின் வேகமும் மிகவும் குறைவு. ஆனால், தற்போதைய சாதாரண கம்ப்யூட்டர்களில் நினைவாற்றல் அந்த முதல் கம்ப்யூட்டரின் நினைவாற்றலை விட 10 லட்சம் மடங்கு அதிகம்.
என்னதான் இன்றைக்கு நாம் நவீன உலகத்தில் பயணித்துகொண்டு இருந்தாலும் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களுமே அந்த காலத்தின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது என்னும்போது அவர்களின் தொலைநோக்கு பார்வை நம்மை சிந்திக்க வைக்கிறது.