டெல்லியில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மாநில அரசு மற்றும் தனியார் லாட்டரிகளுக்கு, ஒரே வரி விதிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் மீதான 12 சதவிகித ஜிஎஸ்டி விதிப்பினை குறைப்பது பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மீது 12 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. செலுத்தப்பட்ட ஜிஎஸ்டியில், உள்ளீட்டு வரித் தொகையை கட்டுமான நிறுவனங்கள் திரும்ப பெறுகின்றன. ஆனால், இந்த தொகை வீடு வாங்குபவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, 12 சதவிகித வரியை 5 சதவிகிதமாக குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.