தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
தமிழக, கேரள எல்லையை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, ராமநாதபுரம், நாமக்கல், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மற்றும் நாகை மாவட்ட திருத்துறைபூண்டியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாரூர் கொடைவாசல், நெல்லை மாவட்ட மணி முத்தாறில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.