இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்- சிறப்பு தொகுப்பு

ஐ.நா.சபையானது கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்ற ‘மனித உரிமைகள்’ பிரகடனத்தை அமல்படுத்தியது.

இந்தப் பிரகடனம் வெளியான நாளே,1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமானவனே, உரிமை, கண்ணியம் என அனைத்திலும் அனைவரும் சமமானவர்களே!

மனிதர்களிடம் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல், சொத்து, பிறப்பு என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பனவற்றை வலியுறுத்தவே மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதாக ஐநா சபை கூறுகிறது. 2019ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கொண்டாட்டங்கள், ‘மனித உரிமைகளைக் காக்க இளைஞர்கள் முன்னிற்க வேண்டும்’என்ற கருத்தை மையப்படுத்தி உள்ளன.

அனைவருக்குமான வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும், நேர்மறையான மாற்றங்களை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்க இளைஞர்கள் முன்னணியில் இருக்க வேண்டும்,இளைஞர்களின் மேம்பாடே உலகின் மேம்பாடாடு – என்ற முழக்கங்கள் இந்த நாளில் முன்வைக்கப்படுகின்றன. மனித உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர்களுக்கு மக்கள் உதவவும், பாதுகாப்பளிக்கவும் வேண்டும் என்று ஐ.நா. சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வன்கொடுமைகளுக்கு எதிராகவும், பருவநிலை மாற்றங்களுக்கு எதிராகவும், பாலின சிறுபான்மையினர் மற்றும் குரலற்றவர்களுக்கு ஆதரவாகவும் மக்கள் முன்னிற்க வேண்டும் என்ற கருத்தை இந்த நாளில் ஐநா சபை முன்வைத்து உள்ளது.

Exit mobile version