இந்தியாவின் 71-ஆவது குடியரசு தினம் இன்று

இந்தியாவின் 71-ஆவது குடியரசு தினம், நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி ‘குடியரசு தினமாக’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் இன்று அனைவராலும் உற்சாகமாக தேசப்பற்றோடு கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற உள்ள விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.போர் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு, இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.

இதைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார். இந்த ஆண்டு அணிவகுப்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ராணுவத்தின் கே-9 வஜ்ரா, டி-90 பீஷ்மா பீரங்கி, தனுஷ் துப்பாக்கிகள், ஆகாஷ் ஏவுகணை உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.

இந்த குடியரசு தின விழாவை, கல்வியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கண்டுகளிக்க உள்ளார்.  பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ, இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

Exit mobile version