தமிழ்த் திரையுலகில் காதல், ஆக்ஷன் என தனக்கென தனி ஸ்டைலுடன், 2001ல் வெளிவந்த மின்னலே படத்திலிருந்து தற்போது இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படம் வரை இளம் ரசிகர்களை தன் பக்கம் வைத்திருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் ஒரு இயக்குநர் மட்டுமன்றி தாயாரிப்பு, வசனம் மற்றும் பின்னனி பாடல் என அனைத்திலும் தனது திறமையை வெளிபடுத்தியுள்ளர்.
கௌதம் மேனன் 1973 ல் பிப்ரவரி 25 ல் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒட்டப்பாலத்தில் பிறந்தார். பிறந்தது கேரளாவில் என்றாலும் வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் மெக்கானிக்கால் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி.
கௌதம் மேனனுக்கு தான் ஒரு இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசை. தனது ஆசைக்கு பெற்றோர்களும் கைக்கொடுக்க 1997ஆம் ஆண்டு மின்சாரக் கனவு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் மாதவன்,ரீமாசன் மற்றும் அப்பாஸ் நடித்து 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைக்கு வந்தது இந்த படத்தின் மூலம் கௌதம் மேனன் இயக்குநராக அறிமுகமானார்.தமிழ் ரொமான்டிக் படமான மின்னலே ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.
“மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமான கௌதம் மேனன் தொடர்ந்து “காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா” என தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்துள்ள பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
சூர்யாவை ஒரு ஸ்டைலிஷான நடிகராகவும். கமல்ஹாசனை ஒரு ஹாலிவுட் நடிகராகவும்.சிம்புவைக் கூடப் பெண்களுக்கும் பிடிக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் கௌதம் மேனன்.
தொடர்ந்து வந்த என்னை அறிந்தால்,அச்சம் என்பது மடமையடா,என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் கௌதம் மேனன் பெயர் சொல்லும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.