இன்று இம்மானுவேல் சேகரின் 62 வது ஆண்டு நினைவு தினம் அமைச்சர்கள் அஞ்சலி

இமானுவேல் சேகரின் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் வருவாய்த்துறை அமைச்சர், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இம்மானுவேல் சேகரின் 62வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் செல்லூர் பகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இம்மானுவேல் சேகரின் நினைவிடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்களின் வருகையையொட்டி பரமக்குடியில் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version