இந்திய பங்கு சந்தை இன்று ஏறுமுகம்

இந்திய பங்கு சந்தை இன்று ஏறுமுகமாக உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை மும்பை பங்கு சந்தை தொடங்கியதும் 400 புள்ளிகள் உயர்ந்தது. பின்பு சற்று இறங்கினாலும் 133 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 448 புள்ளிகளாக காணப்படுகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 333 புள்ளிகளாக உள்ளது.

வங்கி , முதலீட்டு மற்றும் ஆட்டோ பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து காணப்படுகிறது. ஆசிய பங்கு சந்தைகள் உயர்ந்து காணப்படுவதால் இந்திய பங்கு சந்தையும் ஏறுமகமாகவே உள்ளது. இன்று H.D.F.C பங்குகளின் 2 வது காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் நிகரலாபம் 5005 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டை விட 20.6 சதவீதம் அதிகம் ஆகும்.

Exit mobile version