இந்தியா-ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த 2018ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பிரதமர் அபே முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து ஜப்பான் வெளியுறத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மொடாகி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் டாரோ கோனோ ஆகியோர் இந்திய அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். இந்த சந்திப்பின் போது இந்தியாவின் ”ஆக்ட் ஈஸ்ட் பாலிசி ”,ஜப்பானின் இலவச மற்றும் ”திறந்த இந்தோ பசிபிக் பார்வை” ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பு மூலம் இருநாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.