சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 771 ரூபாயாகவும், சரவனுக்கு 88 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 168 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 591 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை நேற்றைய விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு 47 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 47 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.