தங்கம் விலை குறைவு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து  30 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு, 22 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 64 ரூபாயாகவும், ஒரு சவரன் 176 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 3 ஆயிரத்து 869 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 952 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 30 பைசா குறைந்து, 49 ரூபாய் 80 பைசாவாகவும், ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version