தென், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மாலத்தீவுகள் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை மற்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த 1-ம் தேதி தொடங்கியது முதல் தென்மாவட்டங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.