உடுமலை அருகே கரும்புதோட்டத்தில் கடந்த 14 நாட்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை இன்று பிடிக்க வனத்துறையினர் தீவிர ஏற்பாடு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கண்ணாடிபுத்தூரில் கடந்த 14 நாட்களாக நிலைகொண்டுள்ள சின்னத்தம்பி யானையை இன்று பாதுகாப்பாக பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வனத்துறை மருத்துவர் அசோகன் தலைமையில் 10 பேர் கொண்ட
மருத்துவ குழுவினரும், 100 பேர் கொண்ட வனத்துறையினரும், காவல்துறையினரும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சிகளில் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக 3 ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு, அங்குள்ள பல இடங்களை சமப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று மாலைக்குள் சின்னத்தம்பி பிடிக்கப்படலாம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .