உத்தரபிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடந்து வரும், கும்பமேளா, மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவடைவதால் திரிவேணி சங்கமத்தில் இன்று மட்டும் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 15ல், மகர சங்கராந்தியில் துவங்கிய கும்பமேளா மகா சிவராத்திரியான, இன்றுடன் முடிகிறது. மொத்தம் 55 நாட்கள் நடைபெற்ற கும்பமேளாவில், இதுவரை சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். இன்று மட்டும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. பக்தர்கள் அதிக அளவில் குவிவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீவிரவாத அச்சுறுத்தலையடுத்து துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரயாக்ராஜ் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள், பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.