தைப்பொங்கலை ஒட்டி, அவனியாபுரத்தில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தை மாதம் முதல் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, தைத் திருநாளின் முதல் நாளான இன்று, மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி விமரிசையாக நடக்கிறது. இன்று காலை 8 மணிக்குத் துவங்கும் இப்போட்டியானது, மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை சான்று, மாடுபிடி வீரர்களுக்கான உடல் தகுதி சான்று மற்றும் டோக்கன்கள் நேற்று வழங்கப்பட்டன. இதனிடையே இப்போட்டியில் 591 காளைகள் பங்கேற்கின்றன. 691 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மதுரை அவனியாபுரத்துக்கு வருகை தந்துள்ளனர்.