ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி: ஜோகோவிச் – தோம்னிக் தீம் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் தோம்னிக் தீமை இன்று எதிர்கொள்கிறார்.

கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கிய 108 வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் கடைசி நாளான இன்று உலகின் 2 ஆம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் இதுவரை 7 முறை ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி அசைக்க முடியாத வீரராக வலம் வருகிறார். தற்போதைய தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜோகோவிச் அரையிறுதியில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். அதேபோல், 5 நிலை வீரரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவருமான தோம்னிக் தீம், யாரும் எதிர்பார்க்கத வகையில், காலிறுதியில் முதல் நிலை வீரரான ரஃபேல் நடாலையும், அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸுவெரெவையும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், இருவரும் மோதும் இறுதி போட்டி மெல்போர்னில் இன்று நடைபெறுகிறது.

இந்தாண்டின் முதல் டென்னிஸ் தொடரை கைப்பற்றுவதில் இருவருக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், இது வரை எந்த ஒரு டென்னிஸ் தொடரையும் கைப்பற்றதாக தோம்னிக் தீம் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல், 8 முறையாக ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்ற ஜோகோவிச்சும் தீவிரமாக உள்ளதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு 29 கோடியே 45 லட்ச ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும். அதேசமயம் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில், அமெரிக்காவின் ராஜீவ் ராம் இங்கிலாந்தின் ஜோ சலிஸ்பரி இணை ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்ஸல், லூக் சவில்லே இணையை எதிர்கொள்கிறது.

Exit mobile version