வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புதிய புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘புல் புல்’ எனப் பெயரிடப்பட்ட இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் அதிக காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.