கொரோனா பாதித்தவருக்கு பயன்தரக்கூடிய டோசிலிசுமாப் மருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக, டோசிலிசுமாப் (Tocilizumab) என்ற மருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோசிலிசுமாப் மருந்து கொரோனா பாதித்தவர்களுக்கு மிகவும் பயன்தரக் கூடிய மருந்தாக உள்ளதால், இந்த மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகளை தடுப்பதில் இந்த மருந்து சிறப்பான பலனை அளித்துள்ளது என்ற அடிப்படையிலும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக் குழு பரிந்துரையின் அடிப்படையிலும் டோசிலிசுமாப் மருந்து தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல். ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முதற்கட்டமாக 100 டோசிலிசுமாப் மருந்து பாட்டில்கள் தமிழகம் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருந்து வாங்கப்பட்டது. இதற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வழங்கினார். இந்த நிலையில், டோசிலிசுமாப் மருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Exit mobile version