கன்னியாகுமரி மாவட்டத்தில் சேமியா பாக்கெட்கள் மூலம் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் புகையிலைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய தி.மு.க. பிரமுகர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளைப் பகுதியில் அன்வர் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து, கேரளாவிற்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்வர் வீட்டில் நடத்திய சோதனையில் சேமியா பாக்கெட்டுகளுக்கு இடையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் புகையிலை பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராவல்ஸ் உரிமையாளர் அன்வரை கைது செய்து, தப்பியோடிய களியக்காவிளை தி.மு.க. பேரூர் செயலாளர் தோமஸ் குமார், தி.மு.க. மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஷாஜகான் மற்றும் செய்து அலி ஆகியோரை தேடி வருகின்றனர்.