காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீர்வள, நிலவளத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர் தேக்கங்களை புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவிரி படுகையில் உள்ள மூன்று நீர்ப்பாசனங்களை புணரமைக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவிரி படுகையில் உள்ள நொய்யல் ஆற்றை புதுப்பிக்க 230 கோடி ரூபாயும், ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு 184 கோடி ரூபாயும், கட்டளை உயர்மட்ட நீர்ப்பாசனத்திற்கு, 335 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பாசனங்கள் முறையாக தூர்வாரப்பட்டு புதுப்பிக்கும் பணிகளுடன் மறுகட்டமைப்பு பணிகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட உள்ளன.