ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் போன்று நடித்த இளைஞர் கைது

ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் போன்று நடித்த அல் ஜியாணி என்பவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த சென்னை விரைவு ரயிலில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர்  பயணம் செய்துள்ளார். அப்போது, டிக்கெட் பரிசோதகராக வந்த ஒருவர் கார்த்திக்கிடம் டிக்கெட் கேட்டுள்ளார். டிக்கெட் பரிசோதகர் மீது சந்தேகமடைந்த கார்த்திக் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் ரயில்வே காவலரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். ரயில்வே காவலர் விசாரித்த போது டிக்கெட் பரிசோதகர் தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்றும் அவர் சேலத்தை சேர்ந்த அல் ஜியானி என்றும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த  அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version