வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபது ஓவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணமாக வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலைக் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, சிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ், முகமது சமி, தீபக் சகர், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
20 ஓவர் போட்டிக்கான அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சிகர் தவான், ரிசப் பந்த், மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ், தீபக் சகர், புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

Exit mobile version