அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சாந்து நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
1988 ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் முடித்த தரண்ஜித் சிங் சாந்து, இதுவரை இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்த ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவை, இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம் செய்ய பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.