பட்டாணி இறக்குமதியை எளிதாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
பட்டாணி இறக்குமதி தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் பட்டாணியை இறக்குமதி செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை மறு பரிசீலனை செய்யமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசின் இந்த இறக்குமதி கட்டுப்பாட்டால் தமிழகத்தில் பட்டாணி கிலோ ஒன்றுக்கு 65 விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பட்டாணி இறக்குமதியை அனுமதித்தால் மட்டுமே, தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் பயன்பெறும் எனக் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதிக்கு அனுமதித்தால், வட மாநிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகம் வழியாக பச்சை மற்றும் மஞ்சள் பட்டாணியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.