ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்காததால், பாரத ஸ்டேட் வங்கிக்கு , 7 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது..
பாரத ஸ்டேட் வங்கியின், 2017ம் ஆண்டின் நிதி நிலைமை குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தபட்டது. இதில் வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு, நடப்பு கணக்குகள் தொடங்குதல், பெருங்கடன்களுக்கான விவரங்கள் அளித்தல், மோசடி மற்றும் அபாய மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில், ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று தெரியவந்தது.
இதனையடுத்து , நோட்டீஸ் அனுப்பப்பட்டு வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில்,விதிமீறல் உறுதி செய்யப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கிக்கு சுமார் 7 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.