ரயியிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் கைது

ஓடும் ரயியிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பெங்களூர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பேருந்துகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே
காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 5 வடமாநிலத்தவர்களை விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.  தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் ஓடும் ரயில்களில் பயணிகளை குறிவைத்து கொள்ளை
அடிப்பவர்கள் என்று தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 85 சவரன் தங்க நகைகளை மீட்டனர். இந்த 5 பேர் மீது பெங்களூர் பகுதிகளில் பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 5 கொள்ளையர்களும் பெங்களூர்  காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

Exit mobile version