மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக உயர்வு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 8 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 400 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version