நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை நீர் வரத்து அதிகரித்து 68 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 74 அடியாக உள்ளது. பாசன தேவைக்காக 65 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடியும் என மொத்தம் 65 ஆயிரத்து 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.