ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், ஃபிரான்ஸின் லூகாஸ் பவுலியை வீழ்த்தி, செர்பியாவின் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஃபிரான்ஸின் லுகாஸ் பவுலியை எதிர்கொண்டார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6 க்கு பூஜ்ஜியம், 6 க்கு 2, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் பவுலியை எளிதில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் 2 ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலுடன் மோத உள்ளார். உலகின் இரு பிரபலமான முன்னணி வீரர்கள் மோதுவது, டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.