அமலாக்கத் துறையிடம் சரண் அடைய விருப்பம் தெரிவித்து, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வருகிற 19ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்கில், சிதம்பரம் சரண் அடைய விருப்பம் தெரிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், சிதம்பரம் சரண் அடைய விருப்பம் தெரிவித்து, மனு மீதான உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.