குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பற்றி பிரதமர் பேச்சு

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்குக் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவளித்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலச் சட்டமன்றத் தேர்தலையொட்டி தும்கா என்னுமிடத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு மதிப்பளித்து அவர்களை இந்நாட்டுக் குடிமக்களாக அங்கீகரிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் போராட்டத்துக்கு காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார். யார் வன்முறையைத் தூண்டுகிறார்கள், யார் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். காங்கிரசின் இத்தகைய செயல்கள் அரசின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தவே செய்யும் எனவும் மோடி குறிப்பிட்டார். குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் நாடாளுமன்றமும் அரசும் நாட்டைக் காப்பாற்றியுள்ளதாக மோடி தெரிவித்தார்.

Exit mobile version