மருத்துவ ஆராய்ச்சிக்காக கஞ்சா சுவைக்கும் வேலைக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆட்களை தேடிக்கொண்டிருக்கிறது.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ‘அமெரிக்கன் மரிஜுவானா’ என்ற கஞ்சா ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்ட மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்சமயம் கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடுகள் அந்த இதழ் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சிக்காக கஞ்சா சுவைக்க விரும்புபவர்களை அந்நிறுவனம் தேடி வருகின்றது.
இந்த வேலைக்காக அந்நிறுவனம் மாதம் ரூ. 2.15 லட்சம் சம்பளம் தருவதாகவும் தெரிவித்துள்ளது. தேர்வாகும் நபர்கள் ஒவ்வொரு மாதமும் விதவிதமாக கஞ்சா ரகங்களை சுவைத்து அதுகுறித்த விமர்சனங்களை கூற வேண்டும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. பணிக்கு சேர விரும்பும் நபர்களுக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா சட்டப்பூர்வ அனுமதியுடன் விளைவிக்க வேண்டும் என்பது மட்டும் தான். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும் எனவும், தாங்கள் ஏன் அந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு நிமிட வீடியோவும் அனுப்ப வேண்டுமாம்.
இதுகுறித்து அந்த இதழின் முதன்மை ஆசிரியர் கூறும் போது, கஞ்சா ஆராய்ச்சியை 20 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் சட்டப்பூர்வமாக்கியுள்ளதால், இந்த நிலை முன்னெப்போதும் இல்லாத அளவு முக்கியமானதாக மாறும் எனவும், கஞ்சா புகைக்கும் வேலைக்கு இதுவரை 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.