சமூகநீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி : மோடி டுவிட்டரில் கருத்து

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மசோதாவுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடஒதுக்கீடு குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தியது, ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுத்ததாக பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

Exit mobile version