காற்றாலை அமைப்பதற்கு ரூ. 35 கோடி கடன் பெற்று மோசடி

காற்றாலை அமைப்பதற்குக் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் 4 தலைமை மேலாளர்கள் உட்பட, 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது…

எஸ்பிஐ வங்கி சார்பில், சிபிஐக்கு அளிக்கப்பட்ட புகாரில் தேனியில் 7.8 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் 13 காற்றாலைகளை அமைப்பதற்காகச் சென்னையைச் சேர்ந்த கனெக்ட் விண்ட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் வங்கியில், 35 கோடி ரூபாய் கடனைப் பெற்றுவிட்டு, 7 இடங்களில் மட்டுமே காற்றாலை அமைத்திருந்ததும், வங்கியிலிருந்து வாங்கிய கடனை வேறு தொழிலுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியதும் தெரியவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடி, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இணைத்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், மோசடிக்கு உடந்தையாக இருந்த எஸ்பிஐ வங்கியில் பணி புரிந்த 4 தலைமை மேலாளர்கள், சம்பந்தப்பட்ட 4 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் 9 பேர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

Exit mobile version