ஜல்லிக்கட்டைக் காண சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைக்காண தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் விடுமுறையில் 3 நாட்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் 16ஆம் தேதி மாலை புறப்பட்டு, 17 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மதுரை சென்றடையும். காலை உணவுக்குப் பின்னர் அலங்காநல்லூர் சென்றடையும். ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டுகளித்த பின்னர், இரவு மதுரையில் உள்ள விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 ஆம் தேதி காலையில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம், அழகர்கோவில் ஆகிய இடங்களில் பயணிகள் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு 19ஆம் தேதி விடியற்காலை சென்னை வந்தடைவார்கள்.  இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு 4 ஆயிரத்து 300 ரூபாயும், சிறியவர்களுக்கு 3 ஆயிரத்து 450 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய கட்டணமில்லா தெலைபேசி எண் – 180042531111 என்ற எண்ணையும், www.ttdconline.com என்ற இணையதளம் வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையிலிருந்து வருகின்ற 26 தேதி இரவு புறப்படும் பேருந்து 17ஆம் தேதி மதுரையை சென்றடைகிறது மதுரையிலிருந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை
பார்ப்பதற்கு சுற்றுலாத்துறை சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்று சிறப்பு சிறப்பு பெறப்பட்டது . இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version