ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவுடன் போடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணு ஆயுதங்கள் மூலம் இரு நாடுகளும் தாக்குதல் நடத்த தடை விதிக்கும் விதமாக 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க திடிரென அறிவித்திருக்கிறது. ஆறு மாதத்தில் முற்றிலும் வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான கடைசி வாய்ப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுத ஒப்பந்ததை மீறி வருவதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version