பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: முதலமைச்சர்

அக்டோபர் 30 ஆம் தேதி உலகச் சிக்கன நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேமிப்பின் தேவையைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு, என்பதைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காகச் சேமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை, பாதுகாப்பானதும், அதிக வட்டி அளிக்கக் கூடியதுமான அஞ்சலகச் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுகச் சேமிக்கப்படும் தொகை, பன்மடங்காகப் பெருகுவதோடு, நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் அத்தொகை பயன்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும், தங்கள் வாழ்வு சிறக்க, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பயன் பெற்றிடக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version