மகள் திருமணத்துக்கு பரோல் கோரி நளினி தொடர்ந்த வழக்கில், அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், வழக்கு விசாரணைக்கு நளினியை காணொலி காட்சி மூலம் சிறையில் இருந்தவாறே ஆஜர்படுத்த அரசு தயாராக இருந்த நிலையில், அதை நளினி ஏற்க மறுத்ததாகவும், அவர் நேரில் மட்டுமே ஆஜராக விரும்புவதாகவும் தெரிவித்தார். காவல்துறை தரப்பு விளக்கத்தை தொடர்ந்து நளினியை வரும் ஜூலை 5ஆம் தேதி பிற்பகல் 2. 15 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், நளினி வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறைத்துறை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும், காவல் துறைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினர்.
Discussion about this post