கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளின் தேவையை பூரத்தி செய்யும் ஒரே கூட்டுறவு நிறுவனமாக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

2021-22ம் ஆண்டிற்கான அரவை பருவத்திற்கு இந்த ஆலையை திறப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், ஆலை பராமரிப்பு, ஊதிய நிலுவை உள்ளிட்ட செலவினங்களுக்கு, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆலையை இயக்குவதன் மூலம் 10 ஆயிரம் கரும்பு விவசாயிகளும், 500 தொழிலாளர்களும் நேரடியாக பயன் பெறுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version