24 மணி நேர நிறுவனங்களை திறக்க அரசாணை: தியேட்டர்களுக்கும் பொருந்துமா?

24 மணிநேரமும் கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அனைத்து தரப்பு பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த அறிவிப்பு திரை அரங்கங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது… 

கடந்த 6ஆம் தேதி 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின் இத்தகய முடிவிற்கு அனைத்து தரபினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரையரங்குகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி உள்ளது. ஆனால் படம் திரையிட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. திரையிடுவதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளார்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஐடி போன்ற பெரு நிறுவனங்களில் ஷிப்ட் முறையில் பணியாற்றக்கூடியவர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் திரைப்படம் பார்ப்பதற்கு வசதியாகவும், அதிக காட்சிகள் திரையிடுவதால் கட்டணமும் குறையும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

24 மணி நேரமும் திரையிடுவதற்கான அனுமதியை வழங்காவிட்டாலும், வரா இறுதி நாட்களில் திரையிட அனுமதி வழங்க தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெரிய நடிகர்களின் படங்களை திரையிடும் போது கூட்டநெரிசலை தவிர்க்கமுடியும் எனவும் தெரிவித்தனர். 24 மணி நேரமும் கடைகள் திறந்து இருப்பதால் பாதுகாப்பான சூழல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க சார்பில் இன்று தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து 24 மணி நேரமும் அனுமதி வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க உள்ளனர். 24 மணி நேரம் திரையிடுவதற்கான அனுமதி வேண்டியும் கோரிக்கை வைக்க உள்ளனர்.

Exit mobile version