திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கால்நடைகளுக்கான மரபுசார் மூலிகை சிகிச்சையில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கால்நடைகளுக்கு மரபுசார் மூலிகை பயன்படுத்துவது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. தனியார் அமைப்பு ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சியில் மாடுகளுக்கு மடிவீக்க நோயை எவ்வாறு குணப்படுத்துவது, கோமாரி நோய்க்கு சிகிச்சை, தமிழக மரபுப்படி இயற்கை மூலிகையை பயன்படுத்தி கால்நடைகளுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட பயிற்சிகள், கால்நடைத்துறை பேராசிரியர்களால் அளிக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.