செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதிமுக தொண்டர்கள்

கோவையில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுடன் மதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. முன்னதாக, கட்சி தொண்டர் ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என செய்தியாளர்கள் தெரிவித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களை திட்ட தொடங்கினார். இதனால் அந்தப் பகுதியில் செய்தியாளர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்பு கட்சி நிர்வாகத்தினர் சமரசம் செய்து செய்தியாளர்களை அனுப்பி வைத்தனர்

Exit mobile version