ஆசிரியர் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் உயர்வு : தமிழக அரசு

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பில் சேருவதற்கான மதிப்பெண்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2002-2003ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பட்டையப்படிப்பில் சேர எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்ற விதி நடைமுறையில் இருந்தது. தற்போது, அந்த விதியை மாற்றியமைத்து எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கு, தேசிய ஆசிரியர் கல்வி குழும விதிகளின்படி, தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டையப்படிப்பில் சேர்வதற்கு மதிப்பெண் 45%, பொதுப்பிரிவினருக்கு 50% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதிகளின்படி தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொடக்கக் கல்வி வகுப்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்தில் மதிப்பெண் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version