இன்றும் நாளையும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு இதுவரை வாங்காதவர்கள் இன்றும் நாளையும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. நீதிமன்ற கட்டுப்பாடு காரணமாக குடும்ப அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்துபவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்படுகிறது. இதுவரை 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டோருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களது வசதிக்காக இன்று மற்றும் நாளை நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் மற்றும் அதற்கு அடுத்த நாட்கள் தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருப்பதால் பொது மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version