காதலியிடம் புதுமையாக காதலை சொன்ன தீயணைப்பு வீரர்

இங்கிலாந்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் கல்லூரி விழாவின் போது தனது பெண் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தில், தீயணைப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருமாறு தனது தோழி ஹெலனாவை, ஜேம்ஸ் எட்ஜ் என்பவர் அழைத்திருந்தார்.

விழாவின் ஒரு கட்டத்தில் பயிற்சி முடித்த வீரர்கள் வரிசையாக நின்று கொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வந்த ஹெலனாவுக்கு ஜேம்ஸ் பூங்கொத்து கொடுத்து காதலை வெளிப்படுத்தினார். அவரின் காதலை ஹெலானா ஏற்றுக் கொண்டார். 5 ஆண்டுகளாக இருவரும் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்கள் காதல் ஒன்று சேர்ந்திருப்பதற்கு சக வீரர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

 

Exit mobile version